மரபுக் கவிதை & புதுக்கவிதை
கவிதை
Vignesh Mohan
Vignesh Mohan
‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை. படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும்.
இலக்கண நூல்களைப் பயின்றும், இலக்கியங்களை இடைவிடாது படித்தும், யாப்பு விதிகளையும், ஓசை நலன்களையும் உள்வாங்கிக் கொண்டு, சீரும் தளையும் சிதையாமல் வரையறுத்த அமைப்பில் பாப்புனைவது மரபுக்கவிதை எனப்படும். இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்படப் பாடுவது புதுக்கவிதையாகும். இவையன்றி இசைப் பாடல்களும் (சந்தப் பாடல்கள்) கவிதை என்பதற்குள் அடங்குவனவாகும்.
புது கவிதையின் தோற்றம்,வளர்ச்சி:
முன்னுரை:
காலம்
என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி
பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை
என்னும் பெயர் பெற்று நாளை
ஏதோ ஒரு பெயர் தாங்கி
ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி
என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக
மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதையின் வளர்ச்சி:
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி
அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால்காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி,கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.
புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்:
1. மணிக் கொடிக் காலம்
2. எழுத்துக் காலம்
3. வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள்
புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின
1.மணிக்கொடிக் காலம்:
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள்புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர். இக்காலத்தில்,புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாகவிளங்கினர்.
2. எழுத்துக் காலம்:
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள்
இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன்,
ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா, க.நாசுப்பிரமணியன்போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.
3.வானம்பாடிக் காலம்:
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில்
புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி,முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன்,
ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக்கவிஞர்களாவர்.
1.மரபுக் கவிதை
ஆசிரியப்பா,
வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய
விருத்தம், கலி விருத்தம் என்னும்
பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக்
கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா
வகைகள் சீர், தளை பிறழாதன;
பாவின வகைகள் குறிப்பிட்ட வாய்பாடுகளில்
அமையும் நான்கு அடிகளை உடையன.
"ஆசில்பர தாரமவை அஞ்சிறைஅ டைப்போம்;
மாசில்புகழ் காதலுறு வேம்;வளமை கூரப்
பேசுவது மானம்;இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்றுநம கொற்றம்" (கம்பராமாயணம்)
இப்பாடல் அளவடி நான்கு கொண்டு அமைவதாகிய கலிவிருத்தமாகும். கும்பகருணன், தன் அண்ணன் இராவணனிடம், ''அடுத்தவனின் கற்புப் பிறழாத மனைவியைக் கொண்டுவந்து சிறையில் அடைப்போம்; ஆனால் புகழை எதிர்பார்ப்போம்; மானத்தைப் பேசுவோம்; காமத்திற்கு அடிமையாவோம்; மானுடர் இழிந்தவர் என்போம்; மானிடப் பெண்டிரை நயப்போம்; நன்றாக இருக்கிறது. அண்ணா, நம்முடைய வெற்றி பொருந்திய அரசாட்சி!'' என்று அரசவையில் துணிந்து நையாண்டி செய்கிறான். இது இராவணனுக்கு மட்டும் கூறப்பட்டதன்று; எக்காலத்திற்கும் சராசரி மனிதனின் அடிமனத்தில் நிலவும் தகாத காம உணர்வைத் திருத்தி நெறிப்படுத்தத் தக்கதாகவும் உள்ளது. ஒலிநயமும் இனியதாக உள்ளது.
1.1. கண்ணதாசன்
பெயர்
|
:
|
கண்ணதாசன்
|
ஆங்கிலம்
|
:
|
Kannadasan
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1927-06-24
|
இறப்பு
|
:
|
1981-11-17
|
இடம்
|
:
|
தமிழ்
நாடு, இந்தியா
|
வேறு
பெயர்(கள்)
|
:
|
காரை
முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
|
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.
பெண்
வாழ்க
சக்தியொரு
பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம் கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப் பாரெல்லாம் வணங்க வாழ்வோம்! பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில் பக்கத்தில் பங்கு கொள்வோம்! பாதாதி கேசமும் சீரான நாயகன் பளிச்சென்று துணைவி வாழ்க! படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும் பாதியாய்த் துணைவன் வாழ்க! தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு என்றெண்ணியே தலைவி வாழ்க! சமகால யோகமிது வெகுகால யாகமென சம்சாரம் இனிது வாழ்க!
-
கண்ணதாசன்
|
1.
2. பாரதிதாசன்
பெயர்
|
:
|
பாரதிதாசன்
|
ஆங்கிலம்
|
:
|
Bharathidasan
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1891-04-29
|
இறப்பு
|
:
|
1964-04-21
|
இடம்
|
:
|
தமிழ்
நாடு, இந்தியா
|
வேறு
பெயர்(கள்)
|
:
|
புரட்சிக்
கவிஞர், பாவேந்தர்
|
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார். புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 ஜூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.
அழகின்
சிரிப்பு
சிறுகுழந்தை
விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!
-
பாரதிதாசன்
1.3. சுப்பிரமணிய பாரதி
பெயர் : சுப்பிரமணிய பாரதி
ஆங்கிலம் : Subramanya
Bharathi
பாலினம் : ஆண்
பிறப்பு : 1882-12-11
இறப்பு : 1921-09-11
இடம்
: எட்டயபுரம், மதராஸ்,
இந்தியா
வேறு
பெயர்(கள்) : பாரதியார்
1882-ம்
ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று
அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில்
படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை
மணந்தார். சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும்,
மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர்,
பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என
பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி
மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம்
அரசசபையால் வழங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை
பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை
மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
அச்சமில்லை
(பண்டாரப்
பாட்டு)
அச்சமில்லை
யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. துச்சமாக வெண்ணிநம்மைச் தூறுசெய்த போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
-
சுப்பிரமணிய
பாரதி
|
||
1.4. தேசிக விநாயகம் பிள்ளை
பெயர்
|
:
|
தேசிக
விநாயகம் பிள்ளை
|
ஆங்கிலம்
|
:
|
Kavimani Desigavinayagam Pillai
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1876-07-27
|
இறப்பு
|
:
|
1959-09-26
|
இடம்
|
:
|
தமிழ்
நாடு, இந்தியா
|
வேறு
பெயர்(கள்)
|
:
|
கவிமணி
|
தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1959) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர். 1940இல் தமிழ்ச் சங்கம் சென்னையில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
மலரும்
மாலையும்
பாட்டுக்
கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா! சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா ! கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங் கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா! |
||
-
தேசிக
விநாயகம் பிள்ளை
|
||
2.புதுக்கவிதை
எதுகை,
மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச்
சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும். மேனாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது.
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று
(சிற்பி பாலசுப்பிரமணியம்)
இக்கவிதை, குறைகளை நிறைகளாக்கி மகிழ்வதை, சாபங்களை வரங்களாகக் கருதும் மனப்பான்மையை மானுடர் யாவர்க்கும் உணர்த்தி நிற்கின்றது.
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று
(சிற்பி பாலசுப்பிரமணியம்)
இக்கவிதை, குறைகளை நிறைகளாக்கி மகிழ்வதை, சாபங்களை வரங்களாகக் கருதும் மனப்பான்மையை மானுடர் யாவர்க்கும் உணர்த்தி நிற்கின்றது.
2.1. மு.மேத்தா
பெயர்
|
:
|
மு. மேத்தா
|
ஆங்கிலம்
|
:
|
M.Metha
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1945-09-05
|
இடம்
|
:
|
பெரியகுளம்
|
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். "நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை" போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும். |
2.2. சிற்பி பாலசுப்பிரமணியம்
பெயர்
|
:
|
சிற்பி
பாலசுப்பிரமணியம்
|
ஆங்கிலம்
|
:
|
Sirpi Balasubramaniam
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1936-07-29
|
இடம்
|
:
|
தமிழ்
நாடு, இந்தியா
|
தமிழ்நாட்டின் சிறந்த கவிஞரும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவரும், சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக்குழு தலைவருமாகிய சிற்பி பாலசுப்பிரமணியம். |
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று
(சிற்பி பாலசுப்பிரமணியம்)
இக்கவிதை, குறைகளை நிறைகளாக்கி மகிழ்வதை, சாபங்களை வரங்களாகக் கருதும் மனப்பான்மையை மானுடர் யாவர்க்கும் உணர்த்தி நிற்கின்றது.
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று
(சிற்பி பாலசுப்பிரமணியம்)
இக்கவிதை, குறைகளை நிறைகளாக்கி மகிழ்வதை, சாபங்களை வரங்களாகக் கருதும் மனப்பான்மையை மானுடர் யாவர்க்கும் உணர்த்தி நிற்கின்றது.
2.3. கவிக்கோ அப்துல் ரகுமான்
பெயர்
|
:
|
கவிக்கோ
அப்துல் ரகுமான்
|
ஆங்கிலம்
|
:
|
Abdhul Rahman
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1937-11-07
|
இடம்
|
:
|
தமிழ்
நாடு, இந்தியா
|
அப்துல் ரகுமான்,(பிறப்பு: நவம்பர் 2, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். |
அருள்
புரியவும்
கஞ்சாவின்
வர்க்கமும் கஞ்சினி மயக்கமும்
கருதாதும் அருள் புரியவும்
கைச்சரசம் எல்லாம் கசந்த ரசம் ஆகவும்
கைச்சரசம் அருள் புரியவும்
நஞ்சான மூவாசை நஞ்சாகவும் தேகம்
நையாது அருள் புரியவும்
ஆசைப் பெருங் கங்கை நீந்தி அக்கரை காணும்
அக்கரைக் கருள் புரியவும்.
காற்றைப் பிடிக்கவும் கரகத் தடைக்கவும்
கட்டிவைத் தருள் புரியவும்
கரகந்தனைக் காற்று உருத்தி உடையாமலுங்
காப்பாற்றி அருள் புரியவும்.
கருதாதும் அருள் புரியவும்
கைச்சரசம் எல்லாம் கசந்த ரசம் ஆகவும்
கைச்சரசம் அருள் புரியவும்
நஞ்சான மூவாசை நஞ்சாகவும் தேகம்
நையாது அருள் புரியவும்
ஆசைப் பெருங் கங்கை நீந்தி அக்கரை காணும்
அக்கரைக் கருள் புரியவும்.
காற்றைப் பிடிக்கவும் கரகத் தடைக்கவும்
கட்டிவைத் தருள் புரியவும்
கரகந்தனைக் காற்று உருத்தி உடையாமலுங்
காப்பாற்றி அருள் புரியவும்.
-
கவிக்கோ
அப்துல் ரகுமான்
2.4. மீரா
பெயர்
|
:
|
மீரா என்ற மீ. ராசேந்திரன்
|
ஆங்கிலம்
|
:
|
Meera
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1938
|
இடம்
|
:
|
தமிழ்
நாடு, இந்தியா
|
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக்
கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
படைப்புகள்:
இராசேந்திரன் கவிதைகள் ( கவிதை நூல்)
மூன்றும் ஆறும் ( கவிதை நூல்)
கோடையும் வசந்தமும் ( கவிதை நூல்)
ஊசிகள் ( கவிதை நூல்)
கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ( கவிதை நூல்)
குக்கூ, ( கவிதை நூல்)
வா இந்தப் பக்கம் (கட்டுரை)
மீரா கட்டுரைகள்
படைப்புகள்:
இராசேந்திரன் கவிதைகள் ( கவிதை நூல்)
மூன்றும் ஆறும் ( கவிதை நூல்)
கோடையும் வசந்தமும் ( கவிதை நூல்)
ஊசிகள் ( கவிதை நூல்)
கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ( கவிதை நூல்)
குக்கூ, ( கவிதை நூல்)
வா இந்தப் பக்கம் (கட்டுரை)
மீரா கட்டுரைகள்
சாகாத
வானம் நாம்
சாகாத
வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்;
சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்;
-
மீரா
2.5. நா. காமராசன்
பெயர்
|
:
|
நா.
காமராசன்
|
ஆங்கிலம்
|
:
|
N.Kamarasan
|
பாலினம்
|
:
|
ஆண்
|
இடம்
|
:
|
போ.மீனாட்சிபுரம் தேனி
|
நா. காமராசன் 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தார். மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழும் காமராசன் அவர்கள் மரபுக் கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் எழுதி தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார் .இன்றைய புதுக்கவிஞர்களின் வரிசையில் முன்னனியில் நிற்பவர் நா.காமராசன். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தம் சிறப்பை வெளிப்படுத்தினார். "கவியரசு" என்ற பட்டம் பெற்ற காமராசன் அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர். மேலும் இவர் சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றும் அழைக்கபட்டார். இவர் கவிதைகளில் வேகம் அதிகம் இருக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் கல்லூரி விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உதவித் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றியவர். "தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர். |
யாத்திரைக்காரன்
ஏடெடுத்து
கவிஎழுதத் தாய் சுமந்தாள் - எனை
ஈன்றெடுத்துத் தாலாட்டிப் பால் கொடுத்தாள்
மூன்றெழுத்து படித்தவுடன் பாட்டெடுத்தேன் - என்
மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன்.
கூடு விட்டுக் கூடு பாய்ந்து போனதில்லை - நான்
கொள்கை விற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை!
கூட வந்து கொடி பிடிக்க யாருமில்லை
குடியிருக்க எனக்கு ஒரு வீடுமில்லை!
நாலு பக்கம்போன 'தெப்பம்' கரை ஏறவில்லை - என்
நாடகத்தில் மூடுதிரை .. சபை கூடவில்லை
தூரதூரம் நான் நடந்தேன் தொடுவானமில்லை - என்
ஆடுபுலி ஆட்டத்திலே கோடுமில்லை - நான்
வசந்தகாலப் பூக்களுக்கும் நிறம் எழுதும்
சித்திரக்காரன் - அடிமை
வாழ்வைவிட்டு வெளிநடப்பு செய்துவிட்ட
யாத்திரைக்காரன்!
ஈன்றெடுத்துத் தாலாட்டிப் பால் கொடுத்தாள்
மூன்றெழுத்து படித்தவுடன் பாட்டெடுத்தேன் - என்
மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன்.
கூடு விட்டுக் கூடு பாய்ந்து போனதில்லை - நான்
கொள்கை விற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை!
கூட வந்து கொடி பிடிக்க யாருமில்லை
குடியிருக்க எனக்கு ஒரு வீடுமில்லை!
நாலு பக்கம்போன 'தெப்பம்' கரை ஏறவில்லை - என்
நாடகத்தில் மூடுதிரை .. சபை கூடவில்லை
தூரதூரம் நான் நடந்தேன் தொடுவானமில்லை - என்
ஆடுபுலி ஆட்டத்திலே கோடுமில்லை - நான்
வசந்தகாலப் பூக்களுக்கும் நிறம் எழுதும்
சித்திரக்காரன் - அடிமை
வாழ்வைவிட்டு வெளிநடப்பு செய்துவிட்ட
யாத்திரைக்காரன்!
- நா. காமராசன்
2.6. வைரமுத்து
பெயர்
|
:
|
வைரமுத்து
|
ஆங்கிலம்
|
:
|
Vairamuthu
|
பாலினம்
|
:
|
ஆண்
|
பிறப்பு
|
:
|
1953-07-13
|
இடம்
|
:
|
வடுகபட்டி,
தேனி மாவட்டம் ,தமிழ்நாடு, �
|
வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன.
சுனாமி
ஏ கடலே
உன் கரையில் இதுவரையில் கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம் முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம் ஏ கடலே நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா முதுமக்கள் தாழியா உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை? உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்? அடக்கம் செய்ய ஆளிராதென்றா புதை மணலுக்குள் புதைத்துவிட்டே போய்விட்டாய்? பிணங்களை அடையாளம் காட்டப் பெற்றவளைத் தேடினோம் அவள் பிணத்தையே காணோம் மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு மரணம் தனியே வந்தால் அழகு மொத்தமாய் வரும் மரணத்தின் மீது சுத்தமாய் மரியாதையில்லை இயற்கையின் சவாலில் அழிவுண்டால் விலங்கு இயற்கையின் சவாலை எதிர்கொண்டால் மனிதன்.
-
வைரமுத்து
2.1 ந. பிச்சமூர்த்தி
இவரைத்
தாண்டி நீங்கள் புதுக் கவிதைக்குள் போய்விடவே முடியாது.... மணிக்கொடி காலத்தில் புதுமைப் பித்தன், கு. பா. ரா
வுக்கு பின் வரும் இவரின்
ஆளுமை.... அசாத்தியமானது.... 1930ல் மணிக் கொடி
இதழில் எழுதத் தொடங்கினார்....குடும்ப பிரச்சினைகளை நிறைய எழுதினார்....குடும்பம் என்பதே கலவைகளின் கூட்டு..அதில் எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம்.. ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாகவும் இருக்கலாம்..
ஆனாலும் மனங்கள் வேறு படும் தருணங்கள்
வந்தே தீரும்.. கருத்துக்கள், அவரவரின் பார்வையில் காட்சியின் பொருள் மாறு படத்தான் செய்யும்..
அத்தனையும் கடந்து கடத்திக் கொண்டு செல்வது என்பது பெரிய சவாலான செயல்.. அது பற்றி அலசுகிறது
இவரின் படைப்புகள்... குடும்ப சிக்கல், தனிமனித உணர்வின் வெளிப்பாடு என்று இவரின் பேனா திறக்கும் ஒவ்வொரு
கதவிலும்... மனித மனங்கள் தனியாகவோ,
கூட்டாகவோ.. யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்...
ந. பிச்சமூர்த்தி
ஆங்கிலம், சமஸ்கிருதம்
, அத்வைதம் என்று தேர்ச்சி பெற்ற இவரின் மனம், துறவு வாழ்க்கையை ஒட்டியே இருந்திருக்கிறது....127 சிறுகதைகளை எழுதிய இவர், 1900ல் கும்பகோணத்தில் பிறந்தவர்....புதுக்கவிதை,வசனகவிதை வரலாற்றில் மகாகவிக்கு அடுத்த முன்னோடி, மணிக்கொடி இதழின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமை. கடைகோடி மனிதனையும் சென்றடையும் வரிகளுக்கு சொந்தக்காரர்...
தாய், வானம்பாடி, ஒருநாள், நாகூர் ஆண்டவா, பாம்பின் கோபம், பெரியநாயகி உலா, மோகினி, விஜயதசமி, முள்ளும் ரோஜாவும், காவல் என்று நீள்கிறது இவரின் படைப்புகள்... |
||
Arumai...
ReplyDeleteSirappu
ReplyDeleteSuper.....
ReplyDeleteSprrbb😍
ReplyDeleteநன்றி🥰
ReplyDelete